GJ Forum
GJ Forum
GJ Forum
GJ Forum
GJ Forum
GJ Forum
GJ Forum
GJ Forum
GJ Forum
Users online : 1 users online
 
 
Tamil News
'குடிசைவாழ் மக்களுக்காக போராடுவோம்: ஜெயலலிதா அறிவிப்பு'

சென்னை : "சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரை உயர்மட்ட சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். ஒன்பது கி.மீ., நீளமுள்ள இந்த சாலை 19 கி.மீ., ஆனது ஏன்? இதனால் பாதிக்கப்படும் குடிசைவாழ் மக்களுக்கு உரிய வாழ்வாதாரம் கிடைக்கவில்லை எனில், அ.தி.மு.க., போராட்டக் களத்தில் இறங்கும்' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னைத் துறைமுகம் - மதுரவாயலை இணைக்கும் வகையில், 9 கிலோ மீட்டர் நீளமுள்ள உயர்மட்ட சாலை அமைக்கப் போவதாக, தி.மு.க., அரசு 2007ல் அறிவித்தது. தற்போது இந்த சாலை 19 கி.மீ., நீளமுள்ளதாக அமைய, அதற்கான ஒப்பந்தம் இறுதி ...


'"உடன்பிறப்பே...' இனியும் உதவுமா இந்த வார்த்தை...? '

உடன்பிறப்பே... கோடிக்கணக்கான தொண்டர்களை உற்சாகமூட்ட தி.மு.க., தலைவர் உச்சரிக்கும் வார்த்தை. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் கட்சி மீது தொண்டர்களுக்கு உள்ள பற்று குறைந்து விடக்கூடாது என்பதற்காக, பாசமாக முதல்வர் உச்சரிக்கும் இந்த,"உயிர்' சொல்லுக்கு, அவரது கட்சியில் மட்டுமல்லாது, அனைத்துத் தரப்பிலும் வரவேற்பு உண்டு. கட்சித் தலைமைக்கும், தொண்டர்களுக்கும் பிணைப்பை ஏற்படுத்தும், "உடன்பிறப்பு' என்ற வாசகத்தின் மதிப்பை கருணாநிதி முழுவதுமாய் உணர்ந்திருக்கிறார். ஆனால், அவருக்கு உள்ள இந்த உணர்வும், பாசமும் அடுத்த கட்ட தலைவர்கள், ...


'எம்.பி.,க்கள் அமளியால் ஒரே வாரத்தில் ரூ.40 கோடி காலி'

புதுடில்லி : விலைவாசி உயர்வு பிரச்னையில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் காரணமாக, கடந்த ஒரு வாரமாக பார்லிமென்ட் நடவடிக்கைகள், எந்த அலுவல்களும் நடக்காமல் முற்றிலும் முடங்கியதால், 40 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், கடந்த மாதம் 26ல் துவங்கியது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், முதல் நாளன்று மட்டும் வழக்கமான முறையில் சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, தொடர்ந்து நான்கு நாட்கள் ராஜ்யசபா, லோக்சபா என இரு சபைகளுமே வழக்கமாகக் கூடினாலும், எந்த அலுவல்களும் உருப்படியாக நடக்கவில்லை. ...


'கந்து வட்டிக்கு செல்லும் சுய உதவி குழு வங்கிக்கடன்'

சேலம் : சேலத்தில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் வங்கிக் கடன் உதவித் தொகை, கந்து வட்டிக்கு விடப்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால், தொழில்புரிய வழங்கும் நிதி, சுயநலவாதிகளின் லாபம் ஈட்ட, தவறாக பயன்படுத்தப்படுகிறது. பெண்களும் தாங்களாகவே தொழில் புரிய வேண்டும் என்ற நோக்கில், 1989ல் மகளிர் சுய உதவிக்குழு, தமிழக அரசால் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் மந்தமான நிலையில் இருந்தாலும், தற்போது அசுர வேகத்தில் வளர்ந்துவிட்டது. படிப்பறிவில்லாத பெண்கள் கூட, சுய உதவிக்குழு உறுப்பினராக ஆர்வமாக உள்ளனர். மேலும், அரசியல் ...


'இன்று முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு : மாதம் 300 யூனிட்க்கு மேல் ஒரு ரூபாய் அதிகம்'

சென்னை : வீடுகளில் இரண்டு மாதங்களில், 600 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கான மின் கட்டணம், யூனிட்டிற்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 600 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கான மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. மின் கட்டண உயர்வு குறித்து, சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் கபிலன், உறுப்பினர் வேணுகோபால் கூறியதாவது: இரு மாதங்களில், 600 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர், குடிசைவாசிகள், விசைத்தறி மின் ...


'முற்பட்ட வகுப்பு ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு'

புதுடில்லி : "உயர் வகுப்பை சேர்ந்த ஏழைகளுக்கும் கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கலாம்' என, பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கான ஆணையம், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தற்போது அரசு வேலை வாய்ப்புகளிலும், கல்வியிலும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மத்திய அரசு ...


'மருத்துவ படிப்பில் சேர்ந்தார் செங்கல் சூளை மாணவர் : ""தினமலர்' செய்தி எதிரொலி'

" மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும் வசதியில்லாததால், மேற்கொண்டு படிக்க முடியாத நிலையில் இருந்த ஏழை மாணவர் கோவிந்தராஜ், மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க இரவு பகலாக செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார்' என, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, "வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள், இந்தியாவை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் செய்த உதவியால், மாணவரின் மருத்துவ படிப்புக்கு தேவையான பணம் கிடைத்து விட்டது' என, மாணவரின் பெற்றோர் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள மல்லிபாளையத்தை சேர்ந்த செங்கல் சூளை கூலித் ...


'மொட்டில் கருகும் மலர்கள் : உரத்த சிந்தனை, எஸ்.ரமா, மனோதத்துவ நிபுணர்'

சமீப காலமாக குழந்தைகள் மனநலம் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் பெற்றோரும், பள்ளி ஆசிரியர்களும் தான். பத்து வயது சிறுவனான மனோஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பெற்றோருக்கு ஒரே மகன். பட்டதாரிப் பெற்றோர், எல்லா விதத்திலும் மனோஜுக்கு நல்வழிகாட்டி. படுசுட்டி, புத்திசாலித்தனம் நிறைந்த மனோஜ், பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறான். அனைத்துத் தேர்வுகளிலும் முதல் ரேங்க். கையெழுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம். இரண்டு வாரங்களுக்கு முன், வயிற்று வலி என அவஸ்தைப்பட்டவன், உள்ளூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு, ...


'வேஷம் கலைந்தது : பாக்., - பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்'

கடந்த வாரம் "விக்கிலீக்'என்ற இணைய தளத்தில் வெளியான ராணுவ ரகசியங்கள், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றின் உண்மையான முகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. இந்த இணைய தளத்தில் வெளியான அமெரிக்க ராணுவத்தின் ரகசியங்களால், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் முகத்திரை கிழிந்திருக்கிறது. காலம், காலமாக பாகிஸ்தான் கடைப்பிடித்து வரும் இரட்டை வேடமும், உலகத்தின் முன் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. "என்ன நடந்தாலும் சரி, பாகிஸ்தான் தான், எங்களின் உண்மையான நண்பன்' என, இறுமாப்புடன் தொடர்ந்து கூறி வரும் அமெரிக்காவும், என்ன சொல்வது என்றே ...



Total Viewers : 011370
Live Viewers Locations

Locations of visitors to this page

Follow me

Bookmark and Share



Copyright ©2008 - 2009, All rights reserved. Design code and concept by Joyal.